Header Ads

  • சற்று முன்



    சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி: 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடியாம்..!!!

    ஹைதராபாத்ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.4 கோடி என்றும் அவரது 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 என்று சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்புக்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    ஆந்திர தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சொத்து மதிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்த மதிப்பு ரூ.73.86 கோடி. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தனிப்பட்ட மொத்த சொத்த மதிப்பு ரூ.3.73 கோடி, ஹைதராபாத் வீட்டின் மதிப்பு ரூ.3.68 கோடி, அம்பாசிடர் காரின் மதிப்பு ரூ.1.52 லட்சம், வங்கி கணக்கில் ரூ.3.59 லட்சம், வங்கிகளில் இவர் பெற்ற கடன் ரூ.3.06 கோடி.

    சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.38.66 கோடி, மொத்த கடன் ரூ.13 கோடி, நிகர சொத்து மதிப்பு ரூ.24.84 கோடி, பஞ்சுகுட்டாவில் உள்ள காலி இடத்தின் மதிப்பு ரூ.73 லட்சம், தமிழகத்தில் உள்ள இடத்தின் மதிப்பு ரூ.1.86 கோடி, மதினாகுண்டா இடத்தின் மதிப்பு ரூ.73 லட்சம், பாரம்பரிய உணவு தயாரிப்பு நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.19.95 கோடி, பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.3.23 கோடி, தங்க நகை ரூ.1.27 கோடி, கார் மதிப்பு ரூ.91 லட்சம்.

    மகன் நாரா லோகேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14.50 கோடி, கடன் ரூ.6.35 கோடி, நிகர சொத்து மதிப்பு ரூ.8.15 கோடி, ஹெரிடேஜ் உணவு நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.2.58 கோடி, மற்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.1.64 கோடி, கார் மதிப்பு ரூ.93 லட்சம். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளராக இருந்து வருகிறார்.

    மருமகள் பிராமினியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5.38 கோடி. இதில் மாதாப்பூர் சொத்து மதிப்பு ரூ.17 லட்சம், ஜூப்ளிஹில்ஸ் வீடு ரூ.3.50 கோடி, சென்னை இடத்தின் மதிப்பு ரூ.48 லட்சம், மணிகொண்டாவில் இடமதிப்பு ரூ.1.23 கோடி.

    பேரன் நாரா தேவனேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ.11.59 கோடி. ஜூப்ளி ஹில்ஸ் வீடு ரூ.9.17 கோடி, வங்கி பிக்சட் டெபாசிட் முதலீடு ரூ.2.4 கோடி, வங்கி இருப்பு ரூ.2.31 லட்சம். இது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட அதிகம் ஆகும்

    இந்நிலையில், நாரா லோகேஷ் குண்டூரில் செய்தியாளர்களிடையே பேசுகையில், கட்சி வெளியிட்ட சொத்துக்களை தவிர தனக்கு எந்த சொத்தும் இல்லை என்றும், பினாமியின் பெயரில் சொத்து இருப்பதாக நிரூபித்தால், அதை அந்த நபருக்கே தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad