Header Ads

  • சற்று முன்



    சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.

    சென்னை:
    சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    சென்னைத் துறைமுகத்தில் கனிமங்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை சரக்குகளை இறக்க நடமாடும் ராட்சத கிரேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த திங்கள்கிழமை "எம்.வி.புல்மெர்' என்ற கப்பலில் ஏற்றி வரப்பட்ட 30,565 மெட்ரிக் டன் டாலமைட் என்ற கனிம கற்கள் ஒரே நாளில் இறக்கப்பட்டன. இது சென்னைத் துறைமுகத்தில் ஒரே நாளில் கையாளப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்குமுன்பு இதே வகையான கற்கள் 25,063 மெட்ரிக் டன் கையாளப்பட்டதே சாதனை அளவாக இருந்தது.
    இந்தப் புதிய சாதனைக்கு காரணமாக இருந்த துறைமுக ஊழியர்கள், கப்பல் பணியாளர்கள், இறக்குமதியாளர்களை சென்னை துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad