Header Ads

  • சற்று முன்



    இதற்காகத்தான் வந்தாரா நீதா அம்பானி...!

    யார் வந்தும் இவ்வளவு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தவில்லை. இவரின் வருகையில் கூறப்படும் அத்தனை காரணங்களையும் புறம்தள்ளி கேள்விக்கணைகள் தொங்கிநிற்கின்றன. எதற்காக ஜெயலலிதாவைப் பார்க்க வந்தார் நீதா அம்பானி?
    ரிலையன்ஸ் அதானி!
    தமிழகத்தில் தொழில் முதலீட்டில் தற்போது ரிலையன்ஸைவிட அதானிக் குழுமம் முன்னிலையில் உள்ளது. முன்பு, ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட்களை நிறுவ தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரிய தொழில் முதலீடுகள் எதையும் தமிழகத்தில் செய்யவில்லை.
    அதானிக் குழுமமோ ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், ரூ.4,536 கோடி மதிப்பில் ஐந்து சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவ உள்ளது.
    இது, அந்த நிறுவனத்தின் முதலீட்டில் பெரிய திட்டம் என்று கூறலாம். இந்திய வர்த்தகச் சந்தையில் வேறு தொழில்களைச் செய்தாலும் ரிலையன்ஸ் - அதானி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
    தமிழகம்!
    பெட்ரோலியத் துறையில் முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் கால்பாதிக்க மீத்தேன் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மீத்தேன் ஒப்பந்தம் வழக்கப்பட்டது.
    இந்தத் திட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தின. இதனை அடுத்து இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்தை பி.ஜே.பி அரசு முழுவதுமாக ரத்து செய்யவில்லை. கான்ட்ராக்ட் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    அதாவது, அனுமதி அளிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணிகளை GEECL நிறுவனம் முடிக்காததால், இந்த கான்ட்ராக்ட் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், இது தற்காலிகம் ஆனதுதான். நிரந்தரம் இல்லை என்றும் கூறபடுகிறது. இதை முழு வேகத்தில் செயல்படுத்தும் நிறுவனத்தை அரசு எதிர்பார்த்தது அல்லது அரசை எதிர்பார்க்கவைத்தது ரிலையன்ஸ் குழுமம். இதையடுத்து, தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
    நீதாவும்... ஜெயாவும்!
    மீத்தேன் திட்டம் தற்போது ரத்து செய்ததுபோல் இருந்தாலும் இந்தத் திட்டத்தைத் தொடர ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அந்த அனுமதியைப் பெற்றால் அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்புத் தேவை.
    இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தமிழக அதிகாரிகள் மட்டத்தில் அந்த நிறுவனம் நடத்தியதாகத் தமிழக அரசின் ஒத்துழைப்புக் குறித்த கருத்தைச் சொல்வதற்கு முன்பு, முதல்வர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதனைத் தொடர்ந்தே நீதா அம்பானி, தமிழகம் வந்ததாகவும் கூறப்படுகிறது. 12-ம் தேதி அப்போலோ வந்தவரை தமிழக அதிகாரிகள் வரவேற்று மருத்துவமனைக்குள்அழைத்துச் சென்றனர். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்த நீதா, அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். மீத்தேன் குறித்த விஷயங்களை 'ஃபாலோ' செய்துகொள்ளுமாறு ரிலையன்ஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad