Header Ads

  • சற்று முன்



    பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்

    ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் வியாழக்கிழமை அதிகாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
    சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன்பேரில் கடந்த 10-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது.
    விநாடிக்கு 200 கன அடியாக திறந்து விடப்பட்ட நீர், படிப்படியாக 600 கன அடியாக உயர்த்தப்பட்டது.
    அந்தத் தண்ணீர் ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதய்யபாளையம், சத்தியவேடு பகுதிகளிலுள்ள கால்வாய் வழியாக 152 கி.மீ. தொலைவைக் கடந்து, செவ்வாய்க்கிழமை மாலை தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயின்டை வந்தடைந்தது.

    அங்கிருந்து ஒதப்பை, ஆட்டரம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளிலுள்ள இணைப்புக் கால்வாய் வழியாக 24 கி.மீ. தொலைவைக் கடந்து வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பூண்டி ஏரியை வந்தடைந்தது. அப்போது, ஏரியின் மொத்தக் கொள்ளவான 3,231 மில்லியன் கன அடியில், 93 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் இருந்தது.
    இங்கிருந்து, இணைப்புக் கால்வாய் மூலம் விநாடிக்கு 39 கன அடியும், பேபி கால்வாயிலிருந்து 25 அடியுமாக சேர்ந்து மொத்தம் 64 கன அடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது.
    இந்நிலையில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடுத்த சில தினங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad