Header Ads

  • சற்று முன்



    இலாகாக்கள் ஒப்படைப்பு: ஆளுநரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

    முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன் பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்ற தமிழக ஆளுநரின் (பொறுப்பு) அறிவிப்பை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
    மு.க.ஸ்டாலின், திமுக: ஆளுநரின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே சமயம், பொறுப்பான அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    திருநாவுக்கரசர், காங்கிரஸ்: அரசு பணிகள் தொய்வின்றி நடைபெறவே இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பானது, பல அரசியல் தலைவர்களின் தவறான கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.
    பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர், பாஜக: முதல்வரின் இலாகா மாற்றம் வழக்கமான நடைமுறைதான்.
    நிர்வாக வசதிகளுக்காக, இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது அரசியல் அழுத்தத்தின் காரணமாக இல்லை. 
    ஜி.கே.வாசன், தமாகா: மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளும் தொய்வின்றி செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வரவேற்புக்குரியது.
    இரா. முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்: ஆளுநரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதை சர்ச்சைக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல.
    தமிழசை சௌந்திரராஜன், பாஜக: இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற சுப்பிரமணியன் சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல.
    திருமாவளவன், விசிக: ஆளுநரின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இவற்றை நாகரிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை சர்ச்சைக்கு உட்படுத்தக்
    கூடாது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad