Header Ads

  • சற்று முன்



    கோர்ட் அறை முன் போராட்டம் நடத்திய இரண்டு வக்கீல்கள் தொழில் செய்ய தடை: பார் கவுன்சில் உத்தரவு.

    சென்னை: கோர்ட் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் இரண்டு பேர் தொழில் செய்ய நிரந்தர தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கட்டாய ஹெல்ெமட் உத்தரவை எதிர்த்து, வக்கீல்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிபதிகளுக்கும், நீதி துறைக்கும் எதிராக செயல்பட்டதாக கூறி மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ராமசாமி ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை பார்க்க, கோர்ட் அறைக்கு அனுமதிக்கக் கோரி வக்கீல்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் நீதிபதிகள் மீதும், நீதி துறையின் மீதும் தவறான மற்றும் அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி கோர்ட் அறையின் முன்பு போராட்டம் நடத்தியதாக வக்கீல்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, மகேந்திரன், மகாவீர் சிவாஜி, வின்சென்ட் பிரபாகர், உமாசங்கர், கேசவன் ஆகிய 7 வக்கீல்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. 

    இந்த புகாரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வக்கீல்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் வக்கீலாக பணியாற்ற நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. வக்கீல் மகேந்திரன் மூன்று ஆண்டுகள் பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது. மகாவீர் சிவாஜி உள்பட மற்றவர்கள் இந்த வழக்கில் கடந்த ஒரு ஆண்டு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அனைத்து விதமான கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக தடை விதிக்கபட்டதால் இதை தண்டனை காலமாக கருதி மற்றவர்களை தொழில் செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad